குவைத் செந்தமிழர் பாசறை – ஈகை பெருநாள் ஒன்று கூடல்

169
வெள்ளிக்கிழமை 14.04.2023 குவைத் செந்தமிழர் பாசறை முன்னெடுத்த ஈகை பெருநாள் ஒன்று கூடல் நிகழ்வு மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்த இனிய நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பு செய்த அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும், குவைத் தமிழ் அமைப்புகளான

 மனித நேய கலாச்சார பேரவையின்

குவைத் மண்டல மூத்த நிர்வாகி தமிழ்திரு: ஐயா சீனு முகமது அவர்களுக்கும்

குவைத் தமிழ் ஓட்டுனர் சேவை மையத்தின் தலைவர் தமிழ்திரு: சையத் இமாம் ஜாஃபர் அவர்களுக்கும்
குவைத் தமிழ் சமூக ஊடகவியாளர் ஆருயிர் இளவல் அன்பு தம்பி இதயதுல்லா அவர்களுக்கும்
உலகத் தமிழர் செய்திகள் என்ற ஊடகத்தின் ஆசிரியர் மற்றும் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் குவைத் அமைப்பாளர் தமிழ்திரு: பீர் மரைக்காயர் அவர்களுக்கும்
 குவைத் அறந்தை கணேசன் அறக்கட்டளை அமைப்பின் நிறுவனர் தமிழ் திரு: முகம்மது யூனுஸ் என்கின்ற அறந்தை கணேசன் அவர்களுக்கும்
குவைத் தமிழ் மக்கள் சேவை மையத்தின் செயலாளர் தமிழ்திரு: அப்துல் ரஷீத் அவர்களுக்கும்
குவைத் வெளிநாடு வாழ் தமிழர் நலச்சங்கத்தின் மண்டலசெயலாளர் தமிழ்திரு: கும்பகோணம் சரவணன் அவர்களுக்கும்
தலைவா உணவகத்தின் உரிமையாளர் தமிழ்திரு. கோயா முகமது அவர்களுக்கும்
 குவைத்தில் மிகச்சிறப்பாக இயங்கி வரும் கார்கோ மற்றும் TVS ட்ராவல்ஸ் நிறுவனர் வெற்றித்தமிழர் முனைவர் செ. மு. ஹைதர் அலி ஐயா அவர்களின் சார்பாக எங்களின் அழைப்பை ஏற்று வருகை தந்த வணக்கத்திற்குரிய தமிழ்திரு. கங்கை கோபால் அவர்களுக்கும்
மற்றும்
அனைத்து தாய்த் தமிழ் சொந்தங்களுக்கும் செந்தமிழர் பாசறை உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துகளும் நன்றி பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த இனிய இஃப்தார் நிகழ்வானது செந்தமிழர் பாசறையின் தலைவர் தமிழ்திரு.தமிழன் ரகு அவர்களின் நன்றியுரையுடன் நிறைவுற்றது.