தாம்பரம் சட்டமன்ற தொகுதி  -தலைவர் பிறந்த நாள் விழா

73

வம்பர் 26, 2022 தலைவர் பிறந்தநாள் கொண்டாட்ட விழா நாம் தமிழர் கட்சி

62வது வட்டம் சார்பாக நடைபெற்ற கொடியேற்று விழா மற்றும் மாபெரும் அன்னதான விழா ஆனது சிறப்பாக நடந்தேறியது.

தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு சரியாக காலை 9.30 மணி அளவில் 62வது வட்டத்தின் சார்பாக புலிக் கொடி ஏற்றும் நிகழ்வானது சிறப்பாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து மதியம் ஒரு மணிக்கு கிட்டத்தட்ட 350 நபர்களுக்கு குறையாமல் பொதுமக்களுக்கு அன்னதானம் ஆக சிக்கன்பிரியாணி வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது. இவ்வாறாக நவம்பர் 26 தலைவர் பிறந்த நாள் மிகச் சிறப்பாக தாம்பரம் சட்டமன்ற தொகுதி 62வது வட்டம் சார்பாக கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக தொகுதியின் செய்தித்தொடர்பாளர் திரு வேம்பு செல்வம் மற்றும் தொகுதியின் துணைத் தலைவர் திரு அன்சாரி மற்றும் 62வது வட்ட செயலாளர் திரு சேகர் என்கிற சாரங்கபாணி ஆகியோர்களால் இன்று முழு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.