கருநாடகா கோலார் தங்கவயல் – தலைவர் பிறந்த நாள் விழா

75

26-11-2022, சனிக்கிழமை அன்று தமிழ்த்தாயின் தலைமகன், புறநானூற்றுத் மறவன் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில், கோலார் தங்க வயல் சாம்பியன் பகுதியில் அமைந்துள்ள தூய மரியன்னை பள்ளி வளாகத்தில், தங்கவயல் நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை நடத்திய பள்ளிக் குழந்தைகளுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி மற்றும் தமிழ் மரபு நடன போட்டிகளில் தங்கவயலைச் சார்ந்த 30க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 700க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள்.

மேலும் இந்நிகழ்ச்சியை கர்நாடக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் திரு. ஆ. வெற்றி சீலன், செயலாளர் திரு. பிரதாப் குமார் மற்றும் தூய மரியன்னை பள்ளி மேலாளர் அருட்தந்தை திரு அருண்குமார் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

சிறப்பு அழைப்பாளர்களாக, கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் திரு முத்துமணி, கர்நாடக தமிழ் பள்ளி கல்லூரி நல சங்கத்தின் செயலாளர் புலவர் கார்த்திகாயினி, புதிய கர்நாடக கட்சியின் தலைவர் திரு வேளாங்கண்ணி பால், பி இ எம் எல் தொழிற்சாலையின் DGM (R&D), திரு சசிகுமார், கோலார் தங்க வயல் வரலாற்று புத்தகத்தின் ஆசிரியர் திரு ஸ்ரீகுமார், வீரமாமுனி கலைக்குழுவின் தலைவர் ஆனந்தராஜ் மற்றும் செயலாளர் திரு பால் ரமேஷ், கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

முந்தைய செய்திகவுண்டம்பாளையம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திநத்தம் தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு