நாம் தமிழர் கட்சி – விருகம்பாக்கம் தொகுதியைச் சார்ந்த அன்புத்தம்பி கதிர் செந்தில்நாதன் அவர்கள் தமிழ்நாடு நாளையொட்டி நடைபெற்ற மாபெரும் இந்தி எதிர்ப்புப்பேரணியில் பங்கேற்றுவிட்டு வீடுதிரும்பும் வழியில் ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன்

நாம் தமிழர் கட்சி மீதும் தமிழ்த்தேசிய அரசியலின் மீதும் மிகுந்த பற்றுக்கொண்டு களப்பணியாற்றிவந்த கதிர் செந்தில்நாதன் அவர்களின் மறைவு பேரிழப்பாகும்.
(2/3)
ஈடுசெய்யமுடியாத இழப்பினால்
துயருற்றுள்ள தம்பியின் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புத்தம்பி கதிர் செந்தில்நாதன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!
(3/3)


