பண்ருட்டி சட்டமன்ற தொகுதி – காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் மற்றும் மாதிரி தேர்வு பரிசளித்தல்  நிகழ்வு

52

தமிழ்த் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு பண்ருட்டி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் மற்றும் மாதிரி தேர்வு பரிசளித்தல்  நிகழ்வு 26.11.2022 சனிக்கிழமை காலை புதுப்பேட்டை சரஸ்வதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. காவலர் தேர்வுக்கான பயிற்சிகளை குடுமியான்குப்பம் ராமச்சந்திரன், கலிவரதன் ஆகியோர் நடத்தினர். பயிற்சிக்கு பிறகு நடைபெற்ற மாதிரி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நாம் தமிழர் கட்சி பண்ருட்டி தொகுதி செயலாளர் வெற்றிவேலன் பரிசுகள் வழங்கினார். நிகழ்வில்பண்ருட்டி தொகுதி தலைவர் பிரகாஷ்,   தொரப்பாடி பேரூராட்சி செயலாளர் ஆனந்தராஜ், தங்கவேலு, விஜயராகவன், சந்திரசேகரன் ஆகியோர் பங்கேற்றனர்..