பஞ்சமி நிலங்கள் மீட்பு – தமிழ்நாடு அரசுக்கு சீமான் அடுக்கடுக்கான கேள்விகள்

186
  • ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அன்றைய சென்னை மாகாணத்தில் வாழ்ந்த ஆதித்தமிழ்க்குடி மக்களுக்கு வழங்கப்பட்ட 12 இலட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் இப்போது எங்கே?
  • 55 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் சமூகநீதி ஆட்சிக்காலத்தில்தான் பெருமளவு பஞ்சமி நிலங்கள் ஆதித்தமிழ்க்குடி மக்களை ஏமாற்றி முறைகேடாக அபகரிக்கப்பட்ட நிலையில் அவற்றை மீட்க தமிழ்நாடு அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன? மீட்டுக்கொடுத்த நிலங்கள் எவ்வளவு?
  • பஞ்சமி நிலங்களை மீட்பதற்காக தமிழ்நாடு அரசு அமைத்த குழுக்கள் என்னவானது? பஞ்சமி நிலங்கள் மீட்பது தொடர்பாக ஏற்கனவே ஆண்டவர்களும், இப்போது ஆள்பவர்களும், அவர்களுக்குத் துணை நிற்பவர்களும் என யாருமே வாய் திறக்க மறுப்பது ஏன்?
  • பஞ்சமி நிலங்களை மீட்டு ஆதித்தமிழ்க்குடி மக்களிடம் அளிக்கும் போராட்டத்தை விரைவில் நாம் தமிழர் கட்சி தொடங்கும்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஇராமநாதபுரம் தொகுதி பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல்.
அடுத்த செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வள்ளலார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு