முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

என்னுடைய அன்புத்தம்பி @SilambarasanTR_ அவர்கள் நடித்து, தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு இசைத்தமிழன்…

2

என்னுடைய அன்புத்தம்பி @SilambarasanTR_ அவர்கள் நடித்து, தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு இசைத்தமிழன் என் ஆருயிர் இளவல் @arrahman அவர்கள் இசையமைத்து வெளிவந்திருக்கிற 'வெந்து தணிந்தது காடு' படத்தில், என் பாசத்திற்கும் அன்பிற்கும் உரிய அக்கா @thamarai_writes அவர்கள் எழுதி,

(1/5)

தன் மென் அழகு தமிழால் அப்படியே வடித்திருக்கின்ற அக்கா தாமரை அவர்களுக்கும், அவ்வரிகளுக்கு ஆகச்சிறந்த இசையால் உயிரூட்டியிருக்கும் நம் தலைமுறையின் ஈடுஇணையற்ற இசைத்தமிழன் அன்புஇளவல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கும் எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும்!
உங்கள் பணி தொடரட்டும் தொடரட்டும்!
(4/5)

அயலகத்தில் பணிபுரியும் தன் அருமை கணவனை நினைத்து அன்பு மனைவி பாடுவது போல அமைந்திருக்கும் அப்பாடல் வரிகளும், இசை கோர்ப்பும் தனித்துவமாக அமைந்திருப்பது மனதை மயக்குகிறது.

கணவனைப் பிரிந்து இருக்கக்கூடிய பெண்ணின் ஏக்கத்தையும், வலியையும்

(3/5)

பாடகி மதுஸ்ரீ அவர்கள் இனிமையான குரலில் பாடியிருக்கின்ற #மல்லிப்பூ பாடலை அண்மை நாட்களாக எண்ணற்ற முறை என் பயணங்களிலும், என் ஓய்வு நேரங்களிலும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.

(2/5)

அக்கா தாமரை அவர்களுக்கு இதுபோன்ற மிகச் சிறந்த பாடல்கள் எழுதுவதற்கான வாய்ப்பைத் தொடர்ந்து வழங்கிவரும் இயக்குநர் அன்புச்சகோதரன் @menongautham அவர்களுக்கும், இப்படத்தைத் தயாரித்துள்ள சகோதரர் @VelsFilmIntl @IshariKGanesh அவர்களுக்கும் எனது பேரன்பும், வாழ்த்துகளும்..!

(5/5)

முந்தைய செய்திஅறிவிப்பு: வேளாண் விளை நிலங்களை அழித்து, சிப்காட் தொழில் வளாகம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் மக்கள்திரள் போராட்டம் – சீமான் பங்கேற்பு
அடுத்த செய்திஅக்கா தாமரை அவர்களுக்கு இதுபோன்ற மிகச் சிறந்த பாடல்கள் எழுதுவதற்கான…