அறிவிப்பு: வேளாண் விளை நிலங்களை அழித்து, சிப்காட் தொழில் வளாகம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் மக்கள்திரள் போராட்டம் – சீமான் பங்கேற்பு

323

அறிவிப்பு: வேளாண் விளை நிலங்களை அழித்து, சிப்காட் தொழில் வளாகம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கங்கள் மற்றும் 9 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஒருங்கிணைக்கும்
மாபெரும் மக்கள்திரள் போராட்டம் – சீமான் பங்கேற்பு | நாம் தமிழர் கட்சி

தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (சிப்காட்) சார்பில் தொழில் வளாகம் அமைப்பதற்காக திருவண்ணாமலை மாவட்டம் – அனக்காவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்மா கிராமத்தை சுற்றி அமைந்துள்ள தேத்துரை, குரும்பூர், வீரம்பாக்கம், நெடுங்கள், இளநீர் குன்றம், நர்மாபள்ளம், வட ஆளப்பிறந்தான் மற்றும் அத்தி ஆகிய 9 பஞ்சாயத்திற்கு உட்பட்ட 3174 ஏக்கர் வேளாண் விளை நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், விவசாய இயக்கங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், வருகின்ற 16-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 04 மணியளவில் மேல்மா கூட்டு சாலை அருகில் விவசாய இயக்கங்கள் இணைந்து பேரெழுச்சியாக மாபெரும் மக்கள்திரள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
விவசாய இயக்கங்கள் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அழைப்பை ஏற்று இப்போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றவிருக்கிறார்.
இம்மாபெரும் போராட்டத்தில், கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், பகுதி, ஒன்றியம் உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், உழவர் பாசறை உள்ளிட்ட அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி