முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

காற்றில்லாமல் உயிர் இல்லை. சுவாசம் இல்லை. குளிர்ச்சி இல்லை. காற்றின்…

5

காற்றில்லாமல் உயிர் இல்லை.
சுவாசம் இல்லை.
குளிர்ச்சி இல்லை.
காற்றின் மூலமே ஒலிகள் காதுகளை அடைகின்றன.

காற்று பலமாய் அடிக்கும் இரவில், ஒரு துளி வாசனை திரவம் அரங்கத்தையே அசத்தும்.

வீசுகிற வேகத்தைப் பொறுத்தே காற்றைத் தரம் பிரிக்கிறோம். https://x.com/SeemanOfficial/status/1573469764692987904/video/1

▶ Play Video on X ↗

ஓர் இடத்திலேயே எப்போதும் தங்கிவிடுபவர்கள் எவ்வளவு வலிமையானவர்களாக இருந்தாலும் சரிந்து விடுவார்கள்.

பறந்து திரிகிறவர்களே, பயணம் செல்பவர்களே புயலையும் அனுசரித்துப் புவியை ஆள்வார்கள். https://x.com/SeemanOfficial/status/1573832153120374786/video/1

▶ Play Video on X ↗

நம் மண் சார்ந்த மரங்களின் அருகில் இரவு நேரத்தில் சென்றால், எத்தனை உயிர்களுக்கு அவை விடுதியாக இருக்கின்றன என்பது தெரியும்.
வண்டுகளின் ஓசை, பறவைகள் அடையும் ஒலி என்று அம்மரங்களே வனங்களின் பிரதிநிதியாய் இருக்கும்.
இனிமேலாவது புயலுக்குத்தாக்குப்பிடிக்கும் மரங்களைத் தூக்கிப்பிடிப்போம். https://x.com/SeemanOfficial/status/1574194541388648448/video/1

▶ Play Video on X ↗

மரங்களுக்கும் உணர்வுகள் இருக்கின்றன. மனிதம் மட்டுமே மரத்துப் போயிருக்கிறது.

நம்மிலும் பலருக்கு அடைக்கலம் கொடுத்த அவற்றின் மரணம், பல சோகக் காவியங்களின் சொற்சித்திரம்.

மனிதர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தும் நாம், மரங்களுக்காகவும் செலுத்துவோம்!

– ஐயா இறையன்பு https://x.com/SeemanOfficial/status/1574556930332237824/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்திஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கியிருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஅச்சு ஊடகங்களின் அரசர் பெருந்தமிழர் ஐயா பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு…