கருநாடகம் தங்கவயல் – குருதி கொடை பாசறை

159

5.9.2022 அன்று காலை 10.30 மணியளவில் உன்னத மர அறக்கட்டளை தங்கவயல் (Noble Tree charities of kgf) முன்னெடுப்பில்,தங்கவயல்

நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை மற்றும் தங்கவயல் ரோட்டரி சங்கம் உதவியுடன் உலக அறக்கொடை நாளை முன்னிட்டு குருதிக்கொடை முகாம், மற்றும் சமூகத்தில் நலிவடைந்த உறவுகளுக்கு உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வானது நடந்தேறியது இந்நிகழ்வில் தங்கவயல் முதன்மை குரு அருட்தந்தை. ஜெரோம் ஸ்தனிஸ்லாஸ், தூய வெற்றியன்னை ஆலய பங்குத்தந்தை கில்பர்ட்ராஜ், மொய்து குழும தலைவர்திரு. மொய்து புகாரி, ரோட்டரி சங்க செயலாளர்திரு. பசவராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டனர்,மேலும் உன்னத மர அறக்கட்டளையின் தலைவர் திரு.வெற்றிசீலன், தங்கவயல் தமிழர் கூட்டமைப்பு ஒருங்கினைப்பாளர்திரு. வேளாங்கண்ணி பால்ராசு,வீரமாமுனிவர் கலைக்குழு தலைவர்திரு. ஆனந்தராஜ்,13 ஆவது வட்ட நகரமன்ற உறுப்பினரின் மகன்திரு. மணிகண்டன், இரத்த வங்கி பொறுப்பாளர்திருமதி ரேவதி ஆகியோர் முன்னிலையில் நிகழ்வானது நடந்தது இதில் திரு.மா.பிரதாப்குமார் அவர்கள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்க, திரு.சம்பத் வரவேற்புரையாற்றினார் . நூற்றிர்க்கும் மேற்பட்ட முறை குறுதி கொடை வழங்கிய
திரு.சுடர் அவர்கள் கௌரவிக்கப்பட்டார். இறுதியாக திரு இளங்கோ அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சியானது இனிதே நடந்தேறியது.