இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழுமத் தலைமை இயக்குநராக கலைச்செல்வி நல்லதம்பி நியமனம் – சீமான் வாழ்த்து

130

இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழுமத் தலைமை இயக்குநராக கலைச்செல்வி நல்லதம்பி நியமனம் – சீமான் வாழ்த்து

தமிழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர் அன்புச்சகோதரி கலைச்செல்வி நல்லதம்பி அவர்கள், இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழுமத்தின் ( CSIR ) தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து பெரும் மகிழ்ச்சியடைந்தேன்.

தமிழ்வழிக் கல்வியிலேயே பயின்று, அறிவியல் துறையில் தமக்கிருந்த அளவு கடந்த ஈடுபாட்டாலும், அறிவாற்றலாலும் 25 ஆண்டுகளாகத் தான் வகித்த பொறுப்புகள் அனைத்திலும் திறம்படப் பணியாற்றிய சகோதரி கலைச்செல்வி, தற்போது ஆராய்ச்சி குழுமத்தின் முதல் பெண் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை எண்ணி ஈன்ற பொழுதினும் தமிழ் மண் பெருமை கொள்கிறது.

அறிவியலாளராக மட்டுமின்றிச் சிறந்த இலக்கியவாதியாக 125க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளதோடு, தமிழ்ப்பிள்ளைகள் நவீன அறிவியலை தாய்த்தமிழிலேயே கற்பதற்கு உதவிடும் வகையில் “அறிக அறிவியல்” என்ற இதழின் நிர்வாக ஆசிரியராகவும் திகழ்ந்த சகோதரியின் பணிகள் உள்ள உவகைக் கொள்ளச் செய்கின்றன.

அன்புச் சகோதரி கலைச்செல்வி நல்லதம்பி அவர்கள் இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழுமத்தின் தலைமை இயக்குநராகவும் சிறந்து விளங்கி வாழ்வில் மென்மேலும் சிகரம் தொடவும், பல சாதனைகள் புரியவும் எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

– செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபழங்குடியினர் உரிமைகளுக்காகப் போராட உலகச் சமூகம் முன்வர வேண்டுமென உலகப் பழங்குடியினர் நாளில் உளமார உறுதி ஏற்போம்! – சீமான்
அடுத்த செய்திஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு – 3 இலட்சம் கோடி ரூபாய் முறைகேடு: பாஜக அரசின் முகத்திரையைக் கிழித்தெறிய சனநாயகப் பேராற்றல்கள் அணிதிரள வேண்டும்! – சீமான் அழைப்பு