(புதன் 03-08-2022) காலை 8 மணிக்கு மடத்துக்குளம் பேருந்து நிலையம் அருகில் நமது பாட்டனார் தீரன் சின்னமலை 217 நினைவு வீர வணக்கம் நிகழ்வு மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி தலைவர் ஈஸ்வரசாமி தலைமையில் செயளாலர் சீதாலட்சுமி முன்னிலையில் நடைபெற்றது. இதில் தொகுதி துணைத் தலைவர் விஜயகுமார் மற்றும் செய்தி தொடர்பாளர் வீரக்குமார் மடத்துக்குளம் பேரூராட்சி பொறுப்பாளர் சிவானந்தம் மற்றும் வடிவேலு மற்றும் கிழக்கு ஒன்றியம் பொறுப்பாளர் காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.