திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் வர்ணனை (country) செய்த பெண் நத்தம் பகுதி கிராமங்களை பற்றி மிகக் கேவலமானமுறையில் கேலி செய்துள்ளார் இதை அறிந்த *நாம் தமிழர் கட்சி* யின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பேராசிரியர். முனைவர் *நத்தம் சிவசங்கரன்* அவர்கள் தலைமையில் நாம் தமிழர் கட்சி உறவுகள் நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு சென்று முற்றுகையிட்டனர். முற்றுகையிட்டதை தொடர்ந்து காவல்துறை , நிர்வாகத்திற்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தி நிகழ்ச்சி வர்ணனையாளரை காவல் துறை மற்றும் TNPL நிர்வாகம் நிகழ்ச்சி தொகுக்கும் இடத்தில் இருந்து வெளியேற்றினார்கள்..