கருநாடக மாநிலம் தங்கவயல் – நினைவேந்தல் நிகழ்வு

27

கருநாடக மாநிலம் தங்கவயல் நாம்தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறையின் முன்னெடுப்பில். தங்கவயல் மொழிப்போர் ஈகியர் மோகன் நினைவிடத்தில் தங்கவயல் மொழிப்போர்

ஈகியருக்கு வீரவணக்கம் மற்றும் நினைவேந்தல் நிகழ்வானது நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் மழலையர் பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் தாய்மொழி கல்வியாம் தமிழ்மொழிக்கல்வியை வளர்க்கும் வகையில் வழங்கப்பட்டது.   இந்நிகழ்வில்  ஐயா வேலு அவர்கள் வரவேற்புரையாற்றினார் ,தினேசு அவர்கள் அகவணக்கம் உறுதிமொழியை முன்னெடுத்தார்,தங்கவயல் நாம்தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறையின் செயலாளர் ஐயா.பிரதாப்குமார்அவர்கள் முன்னிலை வகித்து உரையாற்றினார். தொடர்ந்து மொழிப்போர் ஈகியரின் தியாகத்தையும் தாய்மொழியாம் தமிழ்மொழிக்கல்வியின் அவசியத்தை பற்றி தோழமை அமைப்புகளை
சார்ந்த திரு.வேளாங்கண்ணி பால்ராசு,பால்ரமேசு,சகோதரி.கவிதா ஆகியோர் பேசினர்,அதைத்தொடர்ந்து நாம்தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா.வெற்றிசீலன் அவர்கள் எழுச்சியுரையாற்றினார், இறுதியாக இளங்கோ அவர்கள் நன்றியுரையாற்றினார்