விளவங்கோடு சட்டமன்ற தொகுதி குளம் சுத்தப்படுத்துதல்

19

விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடைக்கோடு பேரூராட்சியின் ஈந்திக்காலை எனும் இடத்தில் உள்ள மாஞ்சோட்டுக்கோணம் குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்து வந்தது. ஊர் பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று குளம் தூர்வாரும் பணி (22/5/2022) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. தொகுதி மற்றும் இடைக்கோடு பேரூராட்சியின் சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள்,தொகுதி மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள், கட்சி உறவுகள்,ஊர் பொதுமக்கள் என அனைவரும் சேர்ந்து இப்பணியை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
மகேஸ்வரன்
8754657609