கவுண்டம்பாளையம் தொகுதி மதுபான கடையை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்

43

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட கீரணத்தம் ஹவுசிங் யூனிட் குடியிருப்பு பகுதியில் புதிதாக அமைய உள்ள மதுபான கடையை தடுத்து நிறுத்தும் வகையில் அப்பகுதி மக்களை ஒருங்கிணைத்து மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொகுதியின் துணைத்தலைவர் சின்னதுரை அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சகோதரி கார்த்திகா அவர்கள் மற்றும் மாணவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் தம்பி பேரறிவாளன் அவர்களும் கண்டன உரையாற்றினார்கள்.