பென்னாகரம் தொகுதி- தானி ஓட்டுனர் போராட்டம்

66
பென்னாகரம் சட்டமன்றத்தொகுதி ஒகேனக்கல் பேருந்து நிறுத்தம் அடுத்த தீயணைப்பு துறை அலுவலகம் எதிரே அமைக்கப்பட்ட புதிய தடுப்பினால் ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
எந்தவொரு முன்னறிவிப்புமின்றி புதிதாக அமைக்கப்பட்ட தடுப்பை அகற்ற 23.04.2022 அன்று நாம் தமிழர் கட்சி மேற்கு மாவட்டம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
சம்பவ இடத்திற்கு நேரில் வந்த BDO அவர்கள் ஒகேனக்கல் ஓட்டல் சாலை வழியாக 24×7 மணி நேரத்திற்கும் இலவசமாக ஆட்டோக்கள் ( தானி ) செல்ல இலவசமாக அனுமதி சீட்டு வழங்கினார் . இதில் சுமார் 30 ஆட்டோ ( தானி ) ஓட்டுநர்கள் பயன்பெற்றனர்.  இந்நிகழ்விற்கு  தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் தமிழழகன்,
மேற்கு மாவட்ட தலைவர் ஆனந்தன், மேற்கு மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் இராமசாமி, ஆகியோர் தலைமை தாங்கினர் . மேலும் பாலக்கோடு மற்றும் பென்னாகரம் தொகுதி உறவுகளும் , ஒகேனக்கல் பொதுமக்களும் போராட்டத்தில் இறுதி வரையில் பங்குபெற்றனர்.