குவைத் செந்தமிழர் பாசறையின் வாராந்திர ஒன்றுகூடல், கடந்த 18.02.2022 வெள்ளியன்று மாலை
சால்மியா பூங்காவில் அகவணக்கம், வீரவணக்கம் மற்றும் உறுதிமொழியுடன்
தொடங்கியது.
கிழக்கு மண்டலத்தின் துணைத் தலைவர் திரு.பூமிநாதன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள்.
சிறப்புரையாற்றிய மகளிர் பாசறை துணைத் தலைவி திருமதி சாந்தி அவர்கள் பாசறையின் அடுத்தகட்ட முன்னெடுப்புகளைப்பற்றிய கருத்துரை வழங்கினார்கள்.
மேலும் குவைத் செந்தமிழர் பாசறையின் தலைவர் திரு.தமிழன் ரகு, தெற்கு மண்டலத் தலைவர் திரு. முருகேசன் தேவகி மற்றும் வளைகுடா செந்தமிழர் பாசறையின் செய்தித்தொடர்பாளர் திரு.அருண் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
இறுதியாக கிழக்கு மண்டலச் செயலாளர் திரு. முகமது சுல்தான் அவர்களின் நன்றியுரையுடன் ஒன்றுகூடல் நிறைவு பெற்றது.