நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் செலவீனங்களுக்கான மக்கள் திரள்நிதி திட்டம்! #Donate4Change

452

வரும் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி இம்முறையும் தனித்து தேர்தல் களம் காண்கிறது. பெரும் பொருளாதார வலிமை கொண்ட ஒன்றிய, மாநில ஆளும் மற்றும் எதிர் கட்சிகள் மக்கள் நலன்சார்ந்த செயல்களை முன்னிறுத்தி வாக்குக் கேட்காமல் இதர வழிகளில் வெற்றிபெறும் நோக்கில் களம் காணும் என தெரிகிறது. ஆனால் சமரசமின்றித் மக்கள் நலன் சார்ந்து தனித்தியங்கும் நாம் தமிழர் கட்சி மக்களைப் பெருமளவில் சென்றடைய பொருளாதாரம் பெரும் தடையாக உள்ளது. நேர்மையுடன் களத்தில் நிற்கும் அறத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் வறுமை கோட்டுக்கு கீழுள்ளவர்கள், உழவர் குடிகள், எளிய பின்புலம் கொண்ட இளைஞர்கள், பெண்கள் ஆகியோர் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களாக வரும் நகராட்சி தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

பரப்புரை வாகனச்செலவு, துண்டறிக்கைகள், கூட்டங்கள், கட்டுத்தொகை என அனைத்திற்கும் கணிசமான பொருளாதாரம் தேவைப்படுகின்றது. சிரமப்படும் வேட்பாளர்களுக்கு உதவும் நோக்கில், தேர்தல் செலவுகளுக்காக மக்களிடம் திரள்நிதி (Crowd Funding) மூலம் நிதி திரட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. வழமைபோல் வரவு – செலவு கணக்குகளை வெளிப்படையாக இணையத்தில் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்திற்குப் பேராதரவு தந்து பொருளுதவி செய்து வலிமை சேர்க்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிதி பங்களிக்கும் இணைப்பு: https://donate.naamtamilar.org/