மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி திருமுருக பெருவிழா நிகழ்வு

37

நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி கிழக்கு பகுதியின் 121-வது வட்ட சார்பாக 19/01/2022 அன்று தைப்பூசம் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வை 121-வது வட்ட செயலாளர் அ.ந. அப்துல் யூனுஸ் மற்றும் அனைத்து வட்ட பொருப்பாளர்களும் ஏற்பாடு செய்தனர். இதை தொகுதி துணை தலைவர் இரா. நரேஷ் குமார் தலைமையில் பகுதி, தொகுதி, மாவட்ட பொருப்பாளர் முன்னிலையில் 121-வது வட்ட செயலாளர் வீரத்தமிழர் முன்னனியில் உறுதி மொழியை ஏற்று வாசித்து நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி முடித்து நிகழ்வுக்கு வந்தவர்களுக்கும் மற்றும் அப்பகுதி மக்களுக்கும் பிரசாதத்தை மாவட்ட பொருளாளர் அண்ணன் விநாயகமூர்த்தி மற்றும் தொகுதி துணை தலைவர் இரா. நரேஷ் குமார் அவர்கள் விநியோகம் செய்தனர்.
இந்நன்னாளில் நம்மோடு இணைந்து களம் காண 121-வது வட்டத்தில் திரு குலசேகரன் அவர்கள் தன்னை இணைத்து கொண்டார். அவருக்கு மாவட்ட பொருளாளர் அண்ணன் விநாயகமூர்த்தி அவர்கள் உறுப்பினர் அட்டை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.