கவுண்டம்பாளையம் தொகுதி ஆர்.எஸ்.எஸ் பயிற்சி வகுப்பு நடந்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

14

கவுண்டம்பாளையம் தொகுதி சார்பாக கோவை விளாங்குறிச்சி பகுதியிலுள்ள தர்ம சாஸ்திரா பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பயிற்சிவகுப்பு நடைபெறுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் 31.12.2021 அன்று மதியம் 2 மணிக்கு பள்ளியை முற்றுகையிட்டு மாநில அரசைக் கண்டித்தும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பொறுப்பாளர்களும் தாய் தமிழ் உறவுகளும் திரளாக கலந்துகொண்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்..
இந்த எழுச்சி மிகுந்த போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்