ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் – பண்ருட்டி சட்டமன்ற தொகுதி

156

நாம் தமிழர் கட்சி – பண்ருட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 8ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் நடைபெற்றது. அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஐயா நம்மாழ்வார் அவர்களின் திருஉருவப்படத்துக்கு மலர் வணக்கம், புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் பண்ருட்டி தொகுதி செயலாளர் வெற்றிவேலன்

பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். கடலூர் மாவட்ட தலைவர் மகாதேவன், பண்ருட்டி தொகுதி தலைவர் பிரகாஷ், தொகுதி துணைத்தலைவர் மணிவண்ணன், பண்ருட்டி நகர செயலாளர் (கிழக்கு) வேல்முருகன், பண்ருட்டி ஒன்றிய செயலாளர் சுரேஷ், நெல்லிக்குப்பம் நகர செயலாளர் சிவசந்திரன், பண்ருட்டி ஒன்றிய பொருளாளர் வசந்த.புருசோத்தமன், பண்ருட்டி நகர பொருளாளர் (கிழக்கு) நிஜாமுதீன், பண்ருட்டி ஒன்றிய தலைவர் முத்துக்குமரன், பண்ருட்டி நகர 3வது வார்டு செயலாளர் ரியாஸ்அகமது, சூரக்குப்பம் கஜேந்திரன், நத்தம் தனவேந்தன், நெல்லிக்குப்பம் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட பலர் பங்குபெற்றனர். நிகழ்வில் 500 மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

முந்தைய செய்திஇயற்கை வேளாண் பேரறிஞர்.ஐயா.நம்மாழ்வார் நினைவேந்தல் = காஞ்சிபுரம் தொகுதி
அடுத்த செய்திகுளித்தலை சட்டமன்ற தொகுதி- ஐயா நம்மாழ்வார் மலர்வணக்க நிகழ்வு