கோவை, விளாங்குறிச்சி பகுதியிலுள்ள தர்ம சாஸ்திரா பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பயிற்சிவகுப்பு நடைபெறுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராடிய அண்ணன் கு.ராமகிருட்டிணன் தலைமையிலான இயக்கத்தினர் மீது அடக்குமுறையை ஏவியிருக்கும் திமுக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது! வெட்கக்கேடானது!
கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய எச்.ராஜா மதக்கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும், சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையிலும் அவதூறாகப் பேசியும்கூட அவர் மீது வழக்குத் தொடுக்கத் துப்பற்ற திமுக அரசு, கு.ராமகிருட்டிணன் உள்ளிட்டவர்களைக் கைதுசெய்து, அவர்களை அடக்கி ஒடுக்குகிறதென்றால், இது யாருக்கான ஆட்சியென்பதை நாட்டு மக்கள் உணர்ந்துகொள்ளட்டும்!
அண்ணன் கு.ராமகிருட்டிணன் உள்ளிட்டவர்களைக் கைதுசெய்து, அவர்களை அடக்கி ஒடுக்குகிறதென்றால், இது யாருக்கான ஆட்சியென்பதை நாட்டு மக்கள் உணர்ந்துகொள்ளட்டும்!
(3/3)
— சீமான் (@SeemanOfficial) December 30, 2021
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி