பெரியகுளம் தொகுதி கோட்டாச்சியரிடம் கோரிக்கை மனு

32

தேவதானப்பட்டி பேரூர் சார்பில் தேவதானப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த 14.09.2021 அன்று தேவதானப்பட்டி மேட்டுவளைவு பகுதியில் அடிப்படை வசதி வேண்டி மனு வழங்கப்பட்டது.

அப்பகுதியில் வாழும் 69 குடும்பங்கள் வாழும் பகுதி பேரூராட்சி நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்படாத பகுதியில் வருவதாகவும் 11.11.2021 நாளிலிருந்து 15 நாளுக்குள் மனைவரைமுறை செய்து ரசீது போடவும் இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி உத்தரவிட்டுள்ளது.

எனவே இந்த பேரூராட்சி உத்தரவை ரத்து செய்து மனை பகுதியை அங்கீகரித்து ரசீது வழங்க மாவட்ட ஆட்சியர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட கோரி மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 23.11.2021 அன்று மனு கொடுக்கப்பட்டது. நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இந்நிலையில் பட்டா அழுத்தம் தரும் விதமாக பெரியகுளம் கோட்டாச்சியரிடம் 20.12.2021 விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி மனு வழங்கப்பட்டது

*செய்தி வெளியீடு*

*தேவதானப்பட்டி த.சுரேசு*
பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308