குறிஞ்சிப்பாடி தொகுதி மாவீரர் நாள் நிகழ்வு

6

குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி சார்பாக தமிழீழத்தாய்த்தமிழ்நாட்டின் விடுதலைக்காக உயிர்நீத்த ஈகியர்களின் நினைவைப்போற்றும் வகையில் இன்று மாலை 5 மணிக்கு மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு வடலூர் கும்பகோணம் சாலையில் அமைந்துள்ள இசைவேந்தன் தகவல் தொடர்பு மையத்தில் திட்டமிட்டப்படி நடந்தது.நிகழ்வானது தாய்த்தமிழ் நாட்டின் விடுதலைக்கு உயிர்துறந்த மாவீரர்கள் மற்றும் இனப்பற்றாளர்களுக்கும் அகவணக்கம் செலுத்தி உறுதிமொழிஎடுத்து சரியாக 6;10 மணியளவில் மாவீரர்கள் பாடல் இசைக்கப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.இந் நிகழ்வில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சுமதிசீனிவாசன், தொகுதி தலைவர் ராமச்சந்திரன்,தொகுதிதுணைத்தலைவர் இரவிச்சந்திரன்,தொகுதி செய்திதொடர்பாளர் சம்பத்குமார்,நடுவண் ஒன்றியதலைவர் சுரேஷ்,நடுவண் ஒன்றிய செயலாளர் ராஜன்,நடுவண் ஒன்றிய செய்திதொடர்பாளர் விக்னேஷ்,வடலூர் பொறுப்பாளர்கள்; கனகவேல்,அருள்சின்னப்பராஜ்,சிலம்பரசன்,மணி,சங்கர் தெற்குஒன்றியபொறுப்பாளர் அருளானந்தம்,நடுவண் ஒன்றியம் ராமு (எ) ராகவன்
மற்றும் நாம்தமிழர் கட்சி உறவுகளும் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி மரியாதை செய்தனர்.நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.