குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி அம்பேத்கர் நினைவுநாள் நிகழ்வு

30

தாய்த்தமிழ்
உறவுகளுக்கு வணக்கம் 🙏

குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி சார்பாக இன்று (06.12.2021)காலை 9 மணியளவில் புரட்சியாளர் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவுநாளையொட்டி வடலூர் பேருந்துநிலையம் பண்ருட்டி சாலையில் அமைந்துள்ள அண்ணல்அம்பேத்கர் அவர்களின் திருஉருவச்சிலைக்கு மாலைஅணித்து புகழ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.நிகழ்வானது அண்ணல்அம்பேத்கர்,தமிழ்தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் புகழ்முழக்கமிட்டு, தாயகவிடுதலைப்
போரில் உயிர்துறந்த மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தி ,
இனவிடுதலைஉறுதிமொழிஎடுத்து முடிவுபெற்றது.நிகழ்வில் மாவட்டபொறுப்பாளர் சீனிவாசன்,நடுவண்ஒன்றிய செயலாளர் ராஜன்,நடுவண்ஒன்றியதலைவர்சுரேஷ்,தொகுதிசெய்திதொடர்பாளர் சம்பத்குமார்,வடலூர் நகரத்துணைத்தலைவர் அருள்சின்னப்பராஜ்,வடலூர் பொறுப்பாளர் சிலம்பரசன்,வடலூர் சேவியர்,ராகுல்ராஜ்,தெற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் நரேஷ், அருளானந்தம் ஆகியோர்நிகழ்வில் பங்கேற்றனர்.நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகளுக்குப் புரட்சிகர
வாழ்த்துக்களைத்
தெரிவித்துக்கொள்கிறேன்

நன்றி

இப்படிக்கு,
தி.சம்பத்குமார்,
குறிஞ்சிப்பாடி தொகுதி செய்திதொடர்பாளர்.