கருநாடக மாநிலம் – மாவீரர் நாள் நிகழ்வு

126

27. 11 .2021 அன்று மாலை 6. மணியளவில் நாம் தமிழர் கட்சி சார்பில் கோலார் தங்கவயலில் மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது இந்நிகழ்வில் திரு. சரவண பிரபு அவர்கள் வரவேற்புரை ஆற்ற அகவணக்கம் வீரவணக்கம் உறுதிமொழியை திரு. தினேஷ் அவர்கள் முன்னெடுத்தார் முதன்மை சுடரை கருநாடக மாநில நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா திரு. வெற்றி சீலன் அவர்கள் ஏற்றினார் ,மலர் வணக்கத்தை தங்கவயல் நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பாசறை செயலாளர் ஐயா திரு பிரதாப் குமார் அவர்கள் முன்னெடுக்க வந்திருந்த அனைவரும் மலர்வணக்கம் செலுத்தினர் மாவீரரின் தியாகத்தைப் போற்றி தங்கவயல் நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறையின் பொருளாளர் கவிஞர் வேலு அவர்கள் திரு. முருகன் அவர்கள் வாசித்தார் , திரு. மெய்யழகன் துணைத் தலைவர் தங்கவயல் தமிழர் கூட்டமைப்பு , திரு வேளாங்கண்ணி பால்ராஜ் தலைவர் தங்கவயல் தமிழர் கூட்டமைப்பு ஆகியோர்  கருநாடக மாநில நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா. வெற்றிசீலன் அவர்கள் தங்கவயல் நாம் தமிழர் பண்பாட்டு பாசறையின் துணைத் தலைவர் ஐயா சுகுமார் ஆகியோர்கள் கலந்துகொண்டு மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்றது  நாம் தமிழர் கட்சி –  கோலார் தங்கவயல் -கருநாடக மாநிலம்சண்முகம் ( மாநில செய்தி தொடர்பாளர் )