நாங்குநேரி தொகுதி கலந்தாய்வு கூட்டம்

4

*செய்தி பதிவு*

உறவுகளுக்கு வணக்கம்.

நிகழ்வு :- மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்,

நடைபெற்ற இடம் :- பரப்பாடி அலுவலகம்
நடைபெற்ற நாள். :- 14.11.2021
நடைபெற்றநேரம் :- மாலை 3.00 மணி

நாம் தமிழர் கட்சி நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் பரப்பாடி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இக்கலந்தாய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்.

1.கூட்டத்தில் புதிய தொகுதி பொறுப்பாளர்களை மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுகம் செய்துவைத்தனர்.

2.கூட்டத்தில் முந்தைய பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் உள்ளாட்சி தேர்தலில் சிறப்பாக செயல்பட்ட அனைத்து பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

3.தற்போது காலியாக உள்ள,ஒன்றிய,
பேரூராட்சி,பாசறை பொறுப்பாளர்களை நியமிக்க கருத்துகள் கேட்கப்பட்டு இம்மாத இறுதிக்குள் அனைத்து பொறுப்புகளையும் நிரப்ப முடிவு செய்யப்பட்டது.

4.கட்சியின் விதிமுறைகள் மற்றும் மாவட்ட,தொகுதி,ஒன்றியம்,கிளை பாசறை பொறுப்பாளர்களின் பணி என்ன என்பது குறித்து தொகுதி செயலாளரால் விளக்கி கூறப்பட்டது.மேலும் செய்திதொடர்பாளர் எழுத்து பூர்வமாக தயார் செய்து கொண்டுவந்த கட்சி விதிமுறை, பொறுப்பாளர் பணி, தொகுதி நிர்வாகம்,நிதி குறித்த திட்டங்கள் பாளை மேற்கு ஒன்றிய செயலாளரால் வாசிக்கப்பட்டது.

5.தொகுதியின் நிதி ஆதாரத்தை உறுதி செய்யும் விதமாக தொகுதி துளி திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இத்திட்டத்தின்படி ஒவ்வொறு உறுப்பினருக்கும் 20ரூபாய்,கிளை பொறுப்பாளருக்கு 50ரூபாய்,ஒன்றிய பொறுப்பாளருக்கு100ரூபாய்,தொகுதி பொறுப்பாளருக்கு 200 ரூபாய் என மாத சந்தா பெற தீர்மானிக்கப்பட்டது.(இத் திட்டம் தொடர்பான விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.)

6.தலைவர் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு செய்து அன்றைய தினம் குருதிகொடை முகாம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

7.உறுப்பினர் குறைவாக உள்ள பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

8.ஒவ்வொறு ஒன்றியத்திலும் வாரம் ஒரு நிகழ்வு நடத்த ஒன்றிய பொறுப்பாளர்கள் முயற்சி செய்ய வேண்டும்.
அந்நிகழ்வு கீழ்கண்டவாறு இருந்தால் சிறப்பாக இருக்கும்.

1.உறுப்பினர் சேர்க்கை
2.பனை விதைநடுதல்
3.கபசுரகுடிநீர் வழங்குதல்
4.புலிக்கொடியேற்றல்
5.முட்புதற்களை அகற்றுதல்
6.மரம் நடுதல்
7.பேருந்து நிறுத்தத்தை சுத்தப்படுத்துதல்
8.புகழ்வணக்கம் செலுத்துதல்
9.தெருமுனை பரப்புரை செய்தல்

9.தொகுதி,ஒன்றிய பகிரி குழுக்களில் தேவையில்லாத விவாவதங்கள் செய்வதை தடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டு சில முடிவுகள் எடுக்கப்பட்டது.
1.பொறுப்பாளர்கள் தங்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை முடிந்தவரை தனிச்செய்தியில் விவாதித்து தீர்வு காணலாம். அவ்வாறு தீர்வுகாண முடியாத பிரச்சனைகளை தங்களுக்கு அடுத்த நிலையிலுள்ள பொறுப்பாளருக்கு தகவல் தெரிவித்து தீர்வு காணலாம்.

2.கட்சி உறுப்பினர்கள் உள்ள பொதுவான குழுக்களில் விவாதம் செய்வது புதிய உறுப்பினர்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது.எனவே அதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

3.பொறுப்பாளர் மட்டுமே உள்ள குழுவில் ஆரோக்கிமான விவாதம் செய்வது கட்சி வளர்ச்சிக்கு உதவும்.எனவே கட்சி உறவுகள் ஆரோக்கியமான விவாதம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நிகழ்வில் கலந்து கொண்ட உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்.

1.தாமஸ்
2.ராமையா
3.சிபு ஆண்டனி
4.சத்தியசீலன்
5.ராஜசேகர்
6.சாமிதுரை
7.மோசஸ்ஜோயல்
8.சீயோன்
9.சகாயராஜ்
10.யோகராஜன்
11.ஸ்டாலின் பிரபுபாண்டி
12.மோசஸ்தினகர்
13.மகேஷ்
14.முருகபெருமாள்
15.ஜோசப்சுரேஷ்
16.அரவிந்த்
17.சத்யா செல்வகுமார்
18.அந்தோணி விஜய்
19.அப்பாக்குட்டி
20.ஜான்சன்

*செய்தி வெளியீடு*
*டி.மோசஸ்தினகர்*
*செய்திதொடர்பாளர்*
நாங்குநேரி தொகுதி
9544692414