செய்யாறு தொகுதி குருதிக்கொடை முகாம்

39

உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவர் தமிழினத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 67-வது பிறந்தநாளை முன்னிட்டு செய்யாறு சட்டமன்றத் தொகுதி அனக்காவூர் ஒன்றியம் சார்பில் மாபெரும் குருதிக்கொடை முகாம் அனக்காவூர் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 21-11-2021 அன்று சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பாசறை மாநில பொறுப்பாளர் செந்தில்நாதன் கலந்து கொண்டு குருதி அளித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார் உடன் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட தலைவர் மற்றும் செய்யாறு தொகுதி பொறுப்பாளர்கள், செய்யாறு தொகுதி குருதிக்கொடை பொறுப்பாளர்கள், செய்யாறு தொகுதி இதர பாசறை பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் உறவுகள் திரளானோர் கலந்துகொண்டு குருதி வழங்கினர்.