குவைத் செந்தமிழர் பாசறை – வாராந்திர ஒன்றுகூடல்

163

குவைத் செந்தமிழர் பாசறையின் 22.10.21 வெள்ளியன்று மாலை வாராந்திர ஒன்றுகூடல், அகவணக்கம், வீரவணக்கம் மற்றும் உறுதிமொழியுடன், மொகபுலா கடற்கரையில்
தொடங்கப்பட்டது.

தெற்கு மண்டலத்தின் தலைவர் திரு.முருகேசன் தேவகி  அவர்கள் வழங்கினார்.

சிறப்புரையாற்றிய பாசறைப் பொருளாளர்  திரு.கல்யாண முருகேசன் அவர்கள் திராவிடக்கட்சிகளின் ஆட்சியில் தமிழர்கள் இழந்த வாழ்வாதாரங்கள் என பல கருத்துகளை வழங்கினார்.

தொடர்ந்து நடத்தப்பட்ட கலந்தாய்வில் வளைகுடா செய்தித்தொடர்பாளர் திரு.அருண் தெலஸ்போர் அவர்களால் இலக்கு 2026 முன்னெடுப்புகள் பற்றிய கருத்துக்ள்  கலந்துரையாடப்பட்டு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதனைத்தொடர்ந்து பாசறைத் தலைவர் திரு.தமிழன் ரகு அவர்கள் அடுத்த மாத மாவீரர் நாள் அன்று குருதிக் கொடை நிகழ்வுக்கு வேண்டிய முன்னேற்பாடுகளைப் பற்றியும் பொங்கல் விழா ஏற்பாடுகளைப் பற்றியும் விவரித்து கூறினார்.

அதனைத் தொடர்ந்து திரு. தமிழன் ஜார்ஜ் அவர்களால் நன்றியுரை வழங்கி ஒன்றுகூடல் நிகழ்வு முடித்து வைக்கப்பட்டது.