ஆண்டிபட்டி தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

19

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பாக இன்று 21.11.2021 ஆண்டிப்பட்டியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கலந்தாய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

1. 23.11.2021 அன்று போடியில் நடைபெறவிருக்கும் குருதிக் கொடை முகாமில் தொகுதியின் சார்பாக 100 உறவுகள் கலந்து கொள்ளச் செய்தல்.

2. தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டிபட்டியில், சொக்கம்பட்டியில், கொடிக்கம்பம் நடுதல்.

3. 27.11.2021 அன்று திருப்பூரில் நடைபெறும் மாவீரர் நாள் கூட்டத்திற்கு தொகுதியின் சார்பாக குறைந்தபட்சம் ஒரு வாகனத்திலாவது செல்வதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

4. வரவிருக்கின்ற நகர்புறம் மற்றும் பேரூராட்சி தேர்தல்களில் அனைத்து இடங்களிலும் வேட்பாளரை நிறுத்திட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

5. 27.11.2021 மற்றும் 28.11.2021 அன்று நடைபெற இருக்கின்ற வாக்காளர் சேர்க்கை மற்றும் திருத்த முகாம்களில் அந்தந்த பகுதியில் உள்ள நாம் தமிழர் உறவுகள் தங்களுடைய பெயர் பட்டியல் சரிபார்த்தல் மற்றும் புதிய உறவுகளை வாக்காளர்களாக சேர்த்தல் தொடர்பாக அறிவுறுத்தப்படுகிறது.

செய்தி வெளியீடு

தி.பாலமுருகன்
ஆண்டிப்பட்டி தொகுதி செய்தி தொடர்பாளர்
கைபேசி எண்:
8525940167,6383607046