சேலம் வடக்கு தொகுதி கனமழை பாதிப்பு பகுதிகளை சரி செய்ய மனு

40

 

*(11-10-2021) திங்கட்கிழமை* காலையில் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 9வது வார்டு, *இலங்கை தமிழர்கள் குடியிருக்கும் பகுதியான* சாய் குடியிருப்பு பகுதி கடந்த மாதம் முதல் பெய்துவரும் *கனமழையால் நீர் குடியிருப்புக்குள் புகுந்து வெளியே செல்ல முடியாத அளவிற்கு மக்கள் மிகவும் துன்பப்பட்டு இருந்தனர்*. அந்தப் பகுதியில் உள்ள 80க்கும் மேற்பட்ட குடியிருப்பை சுற்றிலும் மழைநீர் தேங்கி இருப்பதால் *அம்மாப்பேட்டை மண்டல நிர்வாக அலுவலகர்* மற்றும் *வார்டு நிர்வாகிகள்* அவர்களிடம் மனுக்கோடுத்தும், இதுவரை எந்த பயனும் இல்லை. மக்களோடு இரு தொகுதி தோழர்களும் இணைந்து அம்மாப்பேட்டை மண்டலம் ஆணையாளரை சந்தித்து மனுகொடுத்து
*பிரச்சனையை உடனடியாக களஆய்வு செய்து, குறைகளை நிரந்தர தீர்வு கொண்டு வருமாறு* நம் நாம் தமிழர் கட்சி சார்பாக சேலம் வடக்கு தொகுதி செயலாளர் திரு .இமயஈஸ்வரன் அவர்களால் _அழுத்தம்_ கொடுக்கப்பட்டது.*

அதனை அடுத்து நம் கட்சி மனுவினை ஏற்றுக் கொண்டு மாலை 5.00 மணிக்கு, *இன்றே கள ஆய்வு செய்ய அம்மாப்பேட்டை மண்டலம் ஆணையாளர் ஒப்புக்கொண்டு* ததாம்பட்டி பகுதிக்கு வந்தார்கள். *மக்களின் குறைகளையும் அவர்களின் வாழ்வாதார இன்னல்களையும்* மக்களின் சார்பாக *சேலம் வடக்கு தொகுதி செயலாளர் திரு.ந.இமயஈஸ்வரன் அவர்கள் மற்றும் அந்த பகுதி மக்களும் அம்மாப்பேட்டை ஆணையாளர் அவர்களிடம் எடுத்துரைத்தனர்.*நம் மக்களின் அவலத்தைக் கண்டு, அந்த பகுதியில் தேங்கி இருக்கும் மழைநீரை உடனடியாக வெளியேற்றிட *நம் கட்சி பொறுப்பாளர்களுக்கும், அந்த பகுதி மக்களுக்கும் மாநகராட்சி ஆணையாளர் வாக்குறுதி கொடுத்தார்.* அதன் அடிப்படையில்  களத்தில் JCB வண்டியினை கொண்டுவந்து,மாநகராட்சி பணியாளர்களை வைத்து* தாதம்பட்டியில் உள்ள குடியிருப்பு பகுதியில் தேங்கி உள்ள *மழைநீரை அகற்ற,நீர் வழிதடத்தை நிரந்தரமாக அமைக்குமாறு அதிகாரிகளுக்கு ஆணையிட்டார்.* இந்த ஆணையினை ஏற்று செயல்படுவதாக அதிகாரிகள் ஆணையாளரிடம் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

*இந்த பிரச்சனையினை உடனடியாக தீர்வுகாண ஆணையிட்ட ஆணையாளருக்கு, சேலம் வடக்கு தொகுதி சார்பாக  பொறுப்பாளர்கள் அனைவரும் நன்றியினை தெரிவித்தோம்.* (11-10-2021) திங்கள்கிழமை, நடந்த மக்களின் குறையினை தீர்க்க களத்தில் உறுதுணையாக இருந்த தாதம்பட்டியில் உள்ள நம் உறவுகளுக்கும் நாம் தமிழர் கட்சி சேலம் மாநகர் மாவட்டம் மற்றும் சேலம் வடக்கு தொகுதி பொறுப்பாளர்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.*

 

 

முந்தைய செய்திகிணத்துக்கடவு தொகுதி பனை விதை விதைத்தல்
அடுத்த செய்திதமிழ்நாடு அரசு கலைக்கல்லூரியின் ஆசிரியர் பணிக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியுமெனும் அரசின் உத்தரவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் – சீமான் வலியுறுத்தல்