சேலம் வடக்கு தொகுதி மழைநீர் பாதிப்பு உதவி

66

*தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்*

நேற்று தாதம்பட்டி பகுதி மக்கள் நம் நாம் தமிழர் கட்சியிடம் கொடுத்த கோரிக்கையை முன்னெடுத்து *சேலம் மாநகர் மாவட்டம் சார்பில் சேலம் வடக்கு தொகுதி மற்றும் தெற்கு தொகுதி பொறுப்பாளர்கள் இணைந்து கூட்டு முயற்சியால்,*
சேலம் அம்மாபேட்டை மாநகராட்சி ஆணையாளரிடம் நேற்று மனு கொடுத்து,
மாநகரம் சார்பில் அழுத்தம் கொடுத்ததன் அடிப்படையில், இன்று அந்தப் பகுதிக்குள் தேங்கிக்கிடந்த மழை நீரினை அப்புறப்படுத்த இன்று மதியம் *ஜேசிபி எந்திரத்தின் மூலம்* கால்வாய் வெட்டப்பட்டு சிறிது தொலைவில் உள்ள ஓடையில் இணைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

*இது முடிவல்ல..!*
*இதுவே தொடக்கம்..!!!*

இங்ஙனம்,
சேலம் மாநகர் மாவட்ட நிர்வாகிகள்.