மண்ணச்சநல்லூர் தொகுதி பனைவிதை நடும் நிகழ்வு

22

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சித்தாம்பூர் ஏரிக்கரையில் 29-08-2021 ஞாயிறு அன்று 1000 பனைவிதை நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவை திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.பிரபு அவர்கள் தொடங்கி வைத்தார். மேலும் விழாவில் முசிறி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த உறவுகள் மற்றும் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி உறவுகள் பெரும் திரளாக கலந்து கொண்டு பனை விதைகளை விதைத்தனர்.

தகவல் தொழில்நுட்ப பாசறை
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு : 9790510974