மடத்துக்குளம் தொகுதி பொறுப்புகள் மறுசீரமைப்பு

6

(11-09-2021) உடுமலை எம்.பி. விடுதியின் கூட்ட அரங்கில் மடத்துக்குளம் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது.

நிகழ்வில் மடத்துக்குளம் தொகுதி தலைவர் ஈஸ்வரசாமி, துணைத்தலைவர் தண்டபாணி, தொகுதி செயலாளர் அன்வர்தீன், தொகுதி பொருளாளர் பாலமுருகன் செய்தி தொடர்பாளர் வீரக்குமார், திருப்பூர் தெற்கு மாவட்ட பொருளாளர் இரா.கௌதம் மற்றும் ஒன்றியம், பேரூராட்சி பொறுப்பாளர்கள் சுதர்சன், பாலசுப்பிரமணியம், ஜோதிமணி, மகளிர் பாசறை பொறுப்பாளர் ரீட்டா மேரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இக்கலந்தாய்வில் தொகுதி பொறுப்புகள் முதல் பேரூராட்சி, ஒன்றியம் கிளை கட்டமைப்பு என அனைத்து நிலை பொறுப்புகளும் மறுசீரமைப்பு செய்யப்பட்டு புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்வதற்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

மேலும் நிகழ்வின் தொடர்ச்சியாக பெரும்பாவலர் பாரதியார் அவர்களின் 100’வது நினைவு நாள் மற்றும் சமூகநீதிப் போராளி ஐயா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 64’வது நினைவு நாளையும் போற்றும் வண்ணம் அவர்களது உருவப் படங்களுக்கு தொகுதி, பேரூராட்சி மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் ஒருங்கிணைந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நன்றி
நாம் தமிழர்
வீரக்குமார் கோ
தொகுதி செய்தி தொடர்பாளர்
மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி
9659456866.