திருவாரூர் வடக்கு மாவட்டம் தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களின் முதலாமாண்டு புகழ் வணக்க நிகழ்வு

17

திருவாரூர் வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் திருவாரூர் பேபி திரையரங்க சாலையில் உள்ள தொகுதி அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ்தேசிய போராளியுமான தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவு நாளை முன்னிட்டு புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது.

தமிழ் தேசிய போராளியும்,நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரமாக இருந்த தமிழ் முழக்கம் சாகுல் அமீது முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி திருவாரூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

முன்னதாக சாகுல் அமீது நினைவைப் போற்றும் வகையில் அகவணக்கம் மற்றும் அவரது பெருமைகளை பறைசாற்றும் விதமாக புகழ் வணக்கம் முழக்கங்களும் எழுப்பப்பட்டது. இந்நிகழ்வில் சாகுல் அமீது மகளும் மாநில ஊடகப்பிரிவு செயலாளருமான பாத்திமா பர்கானா, திருவாரூர் வடக்கு மாவட்ட செயலாளர் இக்பாலின் வடக்கு மாவட்ட தலைவர் பால்ராஜ் உள்ளிட்ட நகர,ஒன்றிய,தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.