சேலம் நாம் தமிழர் தொழிலாளர் சங்கம் போராட்டம்

68

தோழர்களின் கவனத்திற்கு,

#சேலம்_தலேமா_மின்னணு_தொழிற்சாலையில் ஊதிய உயர்வு கோரிக்கை பட்டியலை நிர்வாகத்திற்கு தொழில்சங்கம் சார்பாக வேண்டுகோள் வைத்து 18 மாதம் ஆகியும், வார்த்தைக்கு அழைத்து பேசமறுக்கிறது.

தலேமாமின்னணு தொழிலாளர்கள் பாதுகாப்பு #நாம்தமிழர் #தொழிலாளர்கள்_நலச்சங்கத்தின் மற்றும் கூட்டமைப்பு
சங்கங்களின் சார்பாக தொழிற்சாலையில் உண்ணாவிரதம் உள்ளிருப்புபோராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் முந்நூறுக்கும் மேற்பட்ட ஆண் பெண் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

தொழிலாளர்களின் நலனுக்காகவும் அவர்களின் வாழ்வாதாரத்தை வாழ்வதற்காகவும் எப்போதும் நாம் தமிழர் கட்சி துணை நிற்கும் என்பதை பறைசாற்றும் விதமாக இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வினை ஒருங்கிணைத்த தலேமாமின்னணு தொழிலாளர்கள் பாதுகாப்பு நாம்தமிழர் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் நிர்வாகிகளுக்கு புரட்சிவாழ்த்துகள்..!

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு
அடுத்த செய்திதிருவாரூர் தொகுதி பொறுப்பாளர்கள் தேர்வு