மகளிர் பாசறை கலந்தாய்வு மாலை 4.30 மணிக்கு திருமதி. ஆஸ்லின் அவர்கள் வீட்டில் வைத்து நடைபெற்றது.
தீர்மானங்கள்.
௧. வரும் சனிக்கிழமை சைமன்காலணி ஊராட்சியில் 3 வது பாடசாலை தொடங்க முடிவு செய்யப்பட்டது.
௨. மகளிர் உறுப்பினர்களை தொடர்பு கொண்டு களத்துக்கு வரும் உறவுகள், தயங்குவர்கள், சூழ்நிலை காரணமாக ஆர்வம் இருந்தும் வர முடியாத நிலையில் இருப்பவர்கள் என பிரிப்பது.
௩. தயங்குவர்களை களத்தில் கொண்டுவருவதும். களத்தில் வர இயலாதவர்களை சமூக வலைதளத்தில் செயல்பட வைப்பது.
௪. சமூகவலைதளத்தை கட்சி வளர்ச்சிக்கு அதிகமாக பயன்படுத்துவது.
௫. பொதுவெளியில் நிகழ்வுகள் போராட்டங்களில் கட்சி அடையாளத்துடன் வருவது.
௬. முககவசம் இந்த மாதம் இரண்டு ஊராட்சிகளுடன் இணைந்து 2 பகுதிகளில் வழங்குவது.
௭. மகளிர் பாசறை நிதி நிலையை உயர்த்தவும் பெண்களை கட்சியில் பெரும் அளவு கொண்டுவரவும் அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கும் முயற்சியாகவும் சிறுதொழில் தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.