நாங்குநேரி தொகுதி எரிபொருள் விலையை குறைக்கக் கோரியும், கனிம வளக்கொள்ளையை தடுக்கக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது

6

நாங்குநேரி தொகுதி களக்காடு நகரம் சார்பாக நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி, மதுபானகடைகளை மூடக்கோரி, எரிபொருள் விலை உயர்வு மற்றும் எரிக்காற்று உருளை விலையை குறைக்கக்கோரியும்  ஒன்றிய, மாநில அரசுகளை கண்டித்து    01-08-2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி முதல் 6.30 மணி வரை களக்காடு மணிக்கூண்டு பேருந்து நிறுத்தத்தில் வைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது. மலைகளை உடைத்து இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதை தண்டிக்க கோரியும், ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. இசை மதிவாணன்

நெல்லை மகளிர் பாசறை மாவட்ட செயலாளர் சகோதரி இனிதா

2021 திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சகோதரி பா.சத்யா

2021 ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சகோதரி சங்கீதா

2021 இராதாபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சகோதரர் ஜேசுதாசன்

ஆகியோர் கண்டன உறையாற்றினர்.

நாங்குநேரி, இராதாபுரம், திருநெல்வேலி தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

9003992624