ஆத்தூர்(சேலம்) தொகுதி மரக்கன்று நடும் விழா

16

05/08/2021 வியாழக்கிழமை அன்று ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, புங்கவாடி ஊராட்சியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் நமது கட்சியின் விவசாயி சின்னத்தில் வாக்களித்த 204 வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 204 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது .
இந்த விழா மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திரு. ஆ. செகதீசபாண்டியன் தலைமையில், மாநில உழவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திரு. மு.க. சின்னண்ணன் அவர்கள் முன்னிலையில் விழா இனிதே நிறைவுற்றது. இந்நிகழ்வை முன்னெடுத்த புங்கவாடி ஊராட்சி உறவுகள் திரு.தண்டபாணி, திரு.மாரிமுத்து மற்றும் திருமதி.சோனியா. மேலும், இந்நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்தவர்கள் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.த. காசிமன்னன் மற்றும் ஆத்தூர் தொகுதி செயலாளர் திரு.சு.தணிகைராசன். மேலும், இந்த நிகழ்வில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் புங்கவாடி ஊராட்சி உறவுகள் பங்கேற்றனர்.

செய்தி வெளியீடு

*செய்தி தொடர்பாளர்*
நாம் தமிழர் கட்சி
ஆத்தூர் (சேலம்) சட்டமன்ற தொகுதி
அலைபேசி: 9994285522