சுரண்டல் அடக்குமுறைக்கு எதிராக கூலி உயர்வு கேட்டு அறவழியில் போராடிய மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் மீது அரசு பயங்கரவாதத்தை கட்டவிழ்து விட்டு பச்சிளம்குழந்தை உட்பட 17 பேரை பச்சை படுகொலை செய்த கொடியநாள்(23/07/1999).
ஆதிக்கவாதிகளுக்கு ஆதரவான அன்றைய திமுக அரசின் கொடுங்கோல் போக்குக்கு இரையான மாஞ்சோலை தேயிலை தோட்ட போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தாமிரபரணி ஆற்றில் உயிர் நீத்த போராளிகளுக்கு திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் மாவட்ட செயலாளர் கண்ணன் மற்றும் மாவட்ட தலைவர் அண்ணன் ராஜசேகர் மற்றும் மகளிர் பாசறை அக்கா சத்யா அவர்கள் தலைமையில் வீரவணக்கம் செலுத்தினர்.
செய்தி வெளியிடுபவர்
த.ஞானமுத்து-செயலாளர்
தகவல் தொழில்நுட்பப்பாசறை
பாளையங்கோட்டை
9788388136 /8667280665