ஆவடி தெற்கு நகர சார்பில் கலந்தாய்வுகூட்டம் 27-06-2021 நடைபெற்றது இக்கூட்டத்தில் தெற்கு நகர உறவுகள் 25 பேர் கலந்து கொண்டனர், இக்கூட்டத்தில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் நடைபெற்ற வரவு செலவு கணக்குகள் விபரத்துடன் தெற்கு நகர தலைவர் திரு.பிச்சமுத்து, தெற்கு நகர செயலாளர் திரு.ஸ்ரீதர் அவர்கள் மற்றும் தெற்கு நகர உறவுகள் முன்னிலையில் தெற்கு நகர பொருளாளர் திரு.செல்வமணி அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது, பின்பு 2021 சட்டமன்ற தேர்தலில் களப்பணி ஆற்றிய தெற்கு நகர உறவுகளுக்கு பாராட்டும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டன அதன்பின்பு கலந்தாய்வில் சில தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டது, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி அறவழிப் போராட்டம் நடத்த வேண்டும் என்றும் மற்றும் எரிபொருட்கள் விலை உயர்வை கண்டித்தும் மதுபான கடைகளை மூடக்கோரி போராட்டம் முன் எடுக்க வேண்டும் என தெற்கு நகர உறவுகள் தீர்மானம்முன்வைத்துள்ளனர்.
இப்படிக்கு
திரு.கிருஷ்ணமூர்த்தி
தெற்கு நகர செய்தி தொடர்பாளர்