இயல்பான நிகழ்வுகளை மண்ணுக்கேற்ற வாழ்வியல் விழுமியங்களோடு சிந்தித்து, துல்லியத்தன்மையோடு ஓவியங்களாகத் தீட்டி, அதற்கு உயிரூட்டும் வல்லமை கொண்ட ஓவியர் அன்புத்தம்பி இளையராஜா கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆட்பட்டு உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமும் அடைந்தேன்.

புகைப்படமா அல்லது ஓவியமா என வேறுபாடு காண இயலாத அளவிற்கு நுட்பமான படைப்புகளைத்தந்த தம்பி இளையராஜா அவர்கள் தனது ஓவியங்களின் வழியே காலங்கள் கடந்தும் வாழ்வார்! அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், ஊடக உலகினருக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்

