சிவகாசி தொகுதியில் மனு அளிக்கும் நிகழ்வுகள்

36

மனு அளிக்கும் நிகழ்வுகள் ஜுன் 16, 2021 புதன்கிழமை காலை 10:30 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெற்றது.

நிகழ்வு 1

(கழிப்பறை வசதி செய்து தரக்கோரி மனு அளிக்கும் நிகழ்வு)

ஆணையூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் (சாட்சியாபுரம்) மகளிர் பாசறை சார்பாக
ஆணையூர் பகுதியில் (ஆணையூர் பஞ்சாயத்து) கழிப்பறை கட்டி தரக்கோரி ஆணையூர் பஞ்சாயத்து தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.

நிகழ்வு 2

தெருவிளக்கு வசதி, மற்றும் வாய்க்கால் வசதி செய்து தரக்கோரி மனு அளிக்கும் நிகழ்வு)

திருத்தங்கல் நகராட்சி அலுவலகத்தில் மாணவர் பாசறை சார்பாக திருத்தங்கல் நகராட்சிக்குட்பட்ட 21வது வார்டில் தெருவிளக்கு வசதி செய்து தரக்கோரியும், 5ஆவது வார்டில் வாய்க்கால் வசதி செய்து தரக்கோரியும் திருத்தங்கல் நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.
+91 9159139098

 

முந்தைய செய்திஒட்டப்பிடாரம் தொகுதி கக்கன் ஐயாவுக்கு புகழ்வணக்கம்
அடுத்த செய்திகன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி கால்வாய் தூர் வாருதல்