கடையநல்லூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கல்:
_கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக_
கொரானா நோய் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும்,உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் கடையநல்லூர் தொகுதிக்குட்பட்ட அதிக மக்கள் வாழும் பகுதியான கடையநல்லூர் நகர பேட்டை பகுதியில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வு மாநில கொள்கை பரப்புச் செயலாளர் அண்ணன் பசும்பொன் தலைமையில், தொகுதிச் செயலாளர் அண்ணன் ஜாபர், நகரத் தலைவர் அண்ணன் முத்தலிப், தொகுதி தகவல் தொழில்நுட்பச் செயலாளர் யாஸிர், கனகராசு(காசிதர்மம்), முன்னாள் நகரச் செயலாளர் அண்ணன் ரஹ்மான் ஹாஜி மற்றும் பல உறவுகள் கலந்துகொண்டனர்.