அறிவிப்பு: பிப். 06, சென்னை சூழலியல் புரட்சி! சூழலியல் அழிவுத் திட்டங்களுக்கு எதிராக சீமான் தலைமையில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்

168

அறிவிப்பு: சென்னை சூழலியல் புரட்சி! | நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் – சுற்றுச்சூழல் பாசறை சார்பாக எதிர்வரும் 06-02-2021 சனிக்கிழமையன்று மாலை 03 மணியளவில் சென்னை, திருவொற்றியூரில் சூழலியல் அழிவுத் திட்டங்களுக்கு எதிராக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கின்றது.

இந்நிகழ்வில் சுற்றுச்சூழல் பாசறை உள்ளிட்ட அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்களும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சார்ந்த நாம் தமிழர் உறவுகளும், சூழலியல் ஆர்வலர்களும், பொதுமக்களும் பெருந்திரளாக பங்கேற்று சூழலியலைக் காக்கும் போரில் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சூழலியல் அழிவுத் திட்டங்களுக்கு எதிராக
மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்
நாள்: 06-02-2021 சனிக்கிழமை, மாலை 03 மணியளவில்
இடம்: சாத்தாங்காடு நெடுஞ்சாலை, ராஜாக் கடை, திருவொற்றியூர், சென்னை

மேலும் தொடர்புக்கு:

+91-9884323380 / 8939818797 / 9884467050

#StopAdaniSaveChennai

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகுடியாத்தம் தொகுதி – மாவீரர்களுக்கு வீரவணக்கம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: மயிலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்