திருவல்லிக்கேணி தொகுதி – சுடுகாடு புகை குழாய் பழுது நீக்க கோரிக்கை

238

திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் மின் தகன எரிபுகை வெளியேற்று குழாய் பழுதடைந்து பல நாட்களாக கரும் புகையானது அந்த பகுதியில் பரவி பொது மக்களுக்கு மூச்சு திணறல் சுவாச கோளாறுகள் ஏற்பட்டது இந்த பிரச்சினையை நாம் தமிழர் கட்சி சேப்பாக்கம் தொகுதியின் திருவல்லிக்கேணி பகுதி தலைவர் திரு.கார்த்திக் மற்றும் தொகுதி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை செயலாளர் திரு.இளையபெருமாள் மற்றும் பகுதி பொறுப்பாளர்கள் இந்த பிரச்சனையை மாநகராட்சி நிர்வாகதிற்கு புகார் அளித்தும் முதலமைச்சர் கீச்சு கணக்கிற்கு புகார் அளித்தும் நாம் தமிழர் கட்சியின் தொடர் அழுத்தம் காரணமாக தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு புதிய எரிபுகை வெளியேற்று குழாய் மாற்றபட்டது பணிகள் நிறைவடைந்தது நாம் தமிழர் கட்சி திருவல்லிக்கேணி பகுதி உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.