திருச்செந்தூர் – நீட் தேர்வில் வென்ற மாணவிக்கு உதவித் தொகை

17

கடந்த மருத்துவ படிப்பிற்கான நீட் தகுதித் தேர்வில், புன்னைக்காயல் அரசு பள்ளியில் பயின்ற மாணவி செல்வி.அ.செல்வம் மிகச்சிறந்த முறையில் தேர்ச்சி பெற்று, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவ கல்வி பயில (M.B.B.S) தகுதி பெற்று சாதனை படித்துள்ளார். எந்தவித சிறப்பு பயிற்சியும் இல்லாமல், உள்ளூர் பள்ளியில் பயின்று, தன் விடா முயற்சியாலும், அரசின் சீரிய ஆசிரியர் பெருமக்களின் ஒத்துழைப்போடும் அவர் இச்சாதனையை படைத்துள்ளார்.

அவரின் மேற்படிப்பிற்கான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட நாம் தமிழர் கட்சி, தங்களால் இயன்ற சிறு தொகையையும் சகோதரியின் மேற்படிப்பிற்காக அளிப்பதில் பெருமை கொள்கிறது. இதனை நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவரும், 2021 திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான திரு.குளோரியான் அவர்கள் சகோதரியை நேரில் சந்தித்து அளித்தார்.