முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை மீண்டும் அதே இடத்தில் நிறுவும் முயற்சியில் வென்ற யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்குப் புரட்சி வாழ்த்துகள்! – சீமான்

296

முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை மீண்டும் அதே இடத்தில் நிறுவும் முயற்சியில் வென்ற யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்குப் புரட்சி வாழ்த்துகள்! – சீமான்

சிங்களப் பேரினவாதத்தால் மிக மோசமான பேரழிவினைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் அதிலிருந்து வெகுவிரைவாக மீண்டெழும் தனது உயிர்ப்புமிக்கப் போர்க்குணத்தையும், போராட்ட உணர்வையும் தமிழ் இளந்தலைமுறையினர் இழந்துவிடவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் முள்ளிவாய்க்கால் நினைவிட மீட்புப்போராட்டம் அமைந்தது போற்றுதற்குரியது.

சிங்களப் பேரினவாத அரசின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, சிங்களக் கைப்பாவையாகச் செயல்படும் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் , வழிகாட்டுதலின் கீழ் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை மீண்டும் அதே இடத்தில் நிறுவ யாழ் பல்கலைகழக மாணவர்கள்
தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து அதில் வெற்றி கண்டிருப்பது ஆறுதலையும், நம்பிக்கையையும் தருகிறது.
ஈழத்தாய்மண் வீரமும், மானமும் கொண்ட மாவீரர்களை ஈன்ற மாண்பமை நிலம் என்பதையும், அது இனவெறியாதிக்கத்திற்கு ஒருபோதும் அடிபணிந்து செல்லாது என்பதையும் உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் இராணுவம், காவல்துறை, புலனாய்வுத்துறை என எத்தகைய அச்சுறுத்தல்களுக்கும் சிறிதும் அஞ்சாமல்
துப்பாக்கி முனைகளுக்கு இடையில் மன உறுதிமிக்கப் போராட்டத்தை
முன்னெடுத்து, அப்போராட்டத்தில் வெற்றிப்பெற்றுள்ள யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எனதன்பு தம்பி, தங்கைகளுக்கு எனது புரட்சிகர வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் உளப்பூர்வமாக உரித்தாக்குகிறேன்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகுளித்தலை தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு
அடுத்த செய்திவிளவங்கோடு தொகுதி – வாக்கு சேகரிப்பு