செந்தமிழர் பாசறை குவைத் மண்டலம் முன்னெடுத்த ஆறாம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு மற்றும் தமிழர் தேசிய திருநாளான பொங்கல் விழா 15.01.2021 வெள்ளிக்கிழமை அன்று மினாஅப்துல்லா பாலைவனப் பகுதியில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதில் பாசறையின் பறையிசைக் குழுவினரின் பறை முழக்கத்துடன் வரவேற்புரை,குவைத்மண்டல பொறுப்பாளர்களின் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துரை, மழலையர் பாசறையின் குழந்தைச் செல்வங்களின் திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் நன்றியுரையுடன் பொங்கல்விழா நிகழ்வு இனிதே கொண்டாடப்பட்டது.